தமிழகம்

ரத்த ஸ்டெம் செல் தான விழிப்புணர்வு நடைப்பயணம் சென்னையில் வரும் 5-ம் தேதி நடக்கிறது

செய்திப்பிரிவு

‘தாத்ரி’ அமைப்பு சார்பில் ரத்த ஸ்டெம் செல் தான விழிப்புணர்வு நடைப்பயணம் வரும் 5-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

சென்னை தரமணியில் ‘தாத்ரி’ ரத்த ஸ்டெம் செல் தானமளிப்பவர்கள் பதிவகம் செயல்பட்டு வருகிறது. 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தாத்ரி அமைப்பு தாலசீமியா, லுக்கேமியா மற்றும் ரத்த புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொருத்தமான ரத்த ஸ்டெம் செல் தானமளிப்பவரை தேடிக் கொடுக்கும் உதவியை செய்கிறது. நாடுமுழுவதும் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் தேவைப் படுபவர்களுக்கு ரத்த ஸ்டெம் செல் தானம் அளிப்பதாக ‘தாத்ரி’ அமைப்பில் பதிவு செய்துள் ளனர். இதுவரை இந்த அமைப்பின் மூலமாக 226 பேர் ரத்த ஸ்டெம் செல்களை தானம் கொடுத்துள் ளனர். ரத்த புற்றுநோயால் பாதிக் கப்பட்ட சென்னையைச் சேர்ந்த ராஜீ(33) உட்பட மொத்தம் 1,200 பேர் பொருத்தமான ரத்த ஸ்டெம் செல்களுக்காக காத்திருக்கின் றனர்.

இந்நிலையில், ‘தாத்ரி’ அமைப் பின் சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தவும், காத்திருக்கும் 1,200 பேருக்கு பொருத்தமான ரத்த ஸ்டெம் செல் கிடைப்பதற்காகவும், ரத்த ஸ்டெம் செல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு நடைப் பயணம் வரும் 5-ம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை நடை பெறுகிறது. தரமணியில் உள்ள டைசல் பயோ பார்க்கில் தொடங் கும் நடைப்பயணம் மத்திய கைலாஷ் சென்று மீண்டும் புறப் பட்ட இடத்துக்கு திரும்புகிறது. 6 கிமீ தூரம் உள்ள நடைப்பயணத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் marcom@datriworld.org என்ற இமெயில் மூலமாகவோ அல்லது 7338854571, 044-22541283 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவுசெய்து கொள்ளலாம்.

SCROLL FOR NEXT