தமிழகம்

உதவி பொறியாளர் பணிக்கு வெளிப்படையான நேர்காணல்: மின்வாரியம் தகவல்

செய்திப்பிரிவு

மின்வாரிய உதவி பொறியாளர்கள் நியமனத்துக்கான நேர்காணலை வெளிப்படையாக, நேர்மையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக மின்வாரியம் தெரி வித்துள்ளது.

தமிழக மின்வாரியத்தில் உதவி பொறியாளர்கள் நியமனத்துக்கான நேர்காணல் நாளை (13-ம் தேதி) தொடங்கி 18-ம் தேதி வரை நடக்க உள்ளது. நேர்காணல் வெளிப் படையாக நடக்கும் வகையில், மின்வாரியம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையில் குழுக்கள் அமைக் கப்பட்டு நேர்காணல் நடத்தப்பட உள்ளது. நேர்காணல் குழுக்களில் இடம் பெற உள்ள நபர்கள் ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் மாற்றப்படுவர். இதுமட்டு மின்றி, விண்ணப்பதாரர்கள் தங் களை எந்த குழுவினர் நேர்காணல் செய்ய வேண்டும் என்பதையும் குலுக்கல் முறையில் அவர்களே நேர் காணல் அரங்கில் தேர்ந்தெடுக்கவும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நேர்காணல் முற்றிலும் வெளிப்படையாக, நேர்மையாக நடத்தப்படும். இதுசம்பந்தமாக இடைத்தரகர்கள் கூறும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண் டாம் என்று மின்வாரியம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT