தமிழகம்

வேலூர் மத்திய சிறையில் பணம், சிம்கார்டு பறிமுதல்: 200 போலீஸார் சோதனை

செய்திப்பிரிவு

வேலூர் ஆண்கள் மத்திய சிறை யில் எஸ்பி தலைமையில் நேற்று 200 போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் கைதிகளிடம் இருந்து பணம், சிம்கார்டு, செல்போன் பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர் தொரப்பாடியில் ஆண்கள் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு, தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என சுமார் 950-க்கும் மேற்பட்டவர் கள் அடைக்கப்பட்டுள்ளனர். இங் குள்ள கைதிகள் மத்தியில், தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா மற்றும் உணவுப் பொருட்கள் பயன் படுத்தப்படுவதாக தொடர்ந்து புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில், வேலூர் ஆண் கள் மத்திய சிறையில் திடீர் சோதனை நடத்தும்படி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாள ருக்கு சிறைத்துறை சார்பில் ரகசிய உத்தரவு வழங்கப்பட்டது. அதன்படி, நேற்று மாலை 4 மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் என சுமார் 200 பேர் சிறை வளாகத்துக்குள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சிறையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போலீஸார் பிரிந்து சென்று, சோதனையில் ஈடுபட்டனர். மேலும், தரையில் சந்தேகப்படும்படியாக இருக்கும் இடங்களில் சோதனை நடத்தினர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த சோதனையில், ரூ.540 பணம், ஒரு சிம்கார்டு, செல்போன் பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை மத்திய சிறை நிர்வாகத் திடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் கூறும்போது, ‘பாதுகாப்புக்காக நாங்கள் இந்த சோதனை நடத்தினோம். நாங்கள் பறிமுதல் செய்த பொருட்களை சிறை நிர்வாகத்திடம் பட்டியலிட்டு ஒப்படைத்துவிட்டோம். இது வழக்கமான சோதனைதான்’ என்றார்.

SCROLL FOR NEXT