தமிழகம்

கெயிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்: அமைச்சர் ஜெயந்தி நடராஜன்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் பணியின் போது விளைநிலங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்: எரிவாயு குழாய் பதிப்பினால், நிலம் மற்றும் விவசாயிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சுற்றுச்சூழல் அமைச்சகம் எதிர்ப்பு தெரிவிக்கும், என்றார்.

கொச்சியிலிருந்து தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக மங்களூருக்கு குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசின் கெயில் (கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்) நிறுவனம் செயல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய் கிழமை (25-ஆம் தேதி) அனுமதி வழங்கியது.

குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்லும் கெயிலின் திட்டத்துக்கு தடை விதிப்பதாக தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து கெயில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியது.

SCROLL FOR NEXT