சசிகலா தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.
கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஜனவரி 4 முதல் 9-ம் தேதி வரை மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி செயலாளர்கள், தொகுதி வாரியாக பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டத்துக்கு உட்பட்ட நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும்.
4-ம் தேதி வட சென்னை வடக்கு, தெற்கு, தென் சென்னை வடக்கு, தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, மத்தி, மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, வேலூர் கிழக்கு, மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, தெற்கு என மாவட்ட வாரியாக ஆலோசனை நடைபெறும்.
6-ம் தேதி தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், சேலம் மாநகர், புறநகர், நாமக்கல், ஈரோடு மாநகர், புறநகர் என மாவட்ட வாரியாக ஆலோசனை நடைபெறும்.
7-ம் தேதி நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை மாநகர், புறநகர், கடலூர் கிழக்கு, மேற்கு, விழுப்புரம் வடக்கு, தெற்கு, கிருஷ்ணகிரி, தருமபுரி என மாவட்ட வாரியாக ஆலோசனை நடைபெறும்.
8-ம் தேதி திருநெல்வேலி மாநகர், புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர் மாநகர், புறநகர், கோவை மாநகர், புறநகர், நீலகிரி,
9-ம் தேதி திருச்சி மாநகர், புறநகர், பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர் வடக்கு, தெற்கு என மாவட்ட வாரியாக ஆலோசனை நடைபெறும்.
சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்'' என்று சசிகலா தெரிவித்துள்ளார்.