திருவண்ணாமலை ஆரணி பகுதியை சேர்ந்தவர் அல்லி. இவர் சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் ஒரு புகார் மனுவை கொடுத்தார். அதில், “ஜமீன் பல்லாவரம் தர்கா சாலையை சேர்ந்த தீபாகரன்(32) என்பவர் எனது மகன் மற்றும் பலரிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி 17 பேரிடம் தீபாகரன் ரூ.32 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
ரூ.10 லட்சம் ஜவுளி திருட்டு
சென்னை மாதவரம் கனகசத் திரம் ஜி.என்.டி. சாலையில் தனியார் லாரி டிரான்ஸ்போர்ட் கிடங்கு உள்ளது. தீபாவளி வருவதை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜவுளிக் கடைகளுக்கு சூரத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஏராளமான ஜவுளி மூட்டைகள் கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அங்கிருந்த 40 ஜவுளி மூட்டைகள் திருடப்பட்டி ருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம். இதுகுறித்து போலீ ஸார் விசாரிக்கின்றனர்.