ஆவின் பால் கலப்பட வழக்கில் சென்னையை சேர்ந்த வைத்தியநாதன் என்பவரை கடந்த மாதம் 18ம் தேதி சிபிசிஐடி போலீஸார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் ஜாமீன் கேட்டு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 25ம் தேதி மனுத் தாக்கல் செய்தார். இதை கடந்த 9ம் தேதி விசாரித்த நீதிபதி குமார் சரவணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே வைத்தியநாதன் ஜாமீன் கேட்டு மீண்டும் அதே நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதே போல் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காத்தவராயன், சென்னியப்பன், சலீம், அர்ச்சுனன், சந்திரசேகர், சுதாகர் ஆகிய 6 பேரும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று முடி வடைந்தது. இம்மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என நீதிபதி குமார சரவணன் தெரிவித்தார்.