தமிழகம்

6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம்: (ஏற்கனவே வகித்த பொறுப்பு அடைப்புக்குறிக்குள்)

ஆர்.கண்ணன் - ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் (சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர் - சுகாதாரம்). எம்.லட்சுமி - வருவாய் நிர்வாக இணை ஆணையர் (விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்). கே.பாலச்சந்திரன் - தொழிலாளர் நல ஆணையர் (தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் கழக மேலாண் இயக்குநர்). என்.முருகானந்தம் - டெல்லி உறைவிட ஆணையர் (இந்திய துறைமுகங்கள் சங்க நிர்வாக இயக்குநர்) அசோக் டோங்கரே - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் - செயலர் (மத்திய பாதுகாப்பு அமைச்சக இணைச் செயலாளர்) ஷில்பா பிரபாகர் சதீஷ் - தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு செயல் துணைத் தலைவர் (சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர் - கல்வி).

SCROLL FOR NEXT