சேஷாசலம் வனப் பகுதியின் செம்மரக்காடு காய்ந்துகிடக்கிறது. வறண்ட ஓடையில் ஏராளமான வண் ணத்துப்பூச்சிகள். நீண்ட நேரம் அசைவில்லை. மெதுவாக தொட் டால் காய்ந்த சிறகாய் உதிர்கின்றன. அத்தனையும் இறந்துவிட்டன!
உலகில் எங்கோ நிகழும் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பு மற்றொரு இடத்தில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தலாம். இதை ‘வண்ணத்துப்பூச்சி விளைவு’ என்பார்கள். தற்போது தமிழகத்தில் வறட்சியின் வடிவத்தில் வந்திருக் கும் பிரளயத்தை வண்ணத்துப் பூச்சிகளே முன்னறிவிப்பு செய்துள் ளதுதான் இயற்கையின் அரிய முரண்களில் ஒன்று. தமிழகத்தில் சுமார் 340 வகையான வண்ணத் துப்பூச்சிகள் இருக்கின்றன. இதில் சுமார் 298 வகையான வண்ணத்துப் பூச்சிகள் சமீப ஆண்டுகளில் காணக் கிடைக்கவில்லை.
பொதுவாக வண்ணத்துப்பூச்சி கள் உணவு, இனப்பெருக்கத் துக்காக வலசை போகின்றன. இந்த முறை வண்ணத்துப்பூச்சிகளின் வலசை வெகுவாக நின்றுவிட்டிருக் கிறது. இதுகுறித்து வண்ணத்துப் பூச்சிகள் ஆய்வாளர் வடிவழகன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
வண்ணத்துப்பூச்சிகளின் வல சைக் காலம் ஏப்ரல் தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும். கோடை யில் பூக்கும் தாவரங்கள் அதிகம். அவற்றில் சுரக்கும் இனிப்பான ‘நெக்டார்’ திரவம் வண்ணத்துப் பூச்சிகளின் விருப்ப உணவு. நீண்ட தூரம் பறக்க வண்ணத்துப்பூச்சி களுக்கு சில கனிமச் சத்துக்கள் தேவை. இவை ஆறுகள், ஓடைக் கரைகளில் கரிய நிறத்தில் சேகர மாகும் தாது மணல்வெளிகளில் கிடைக்கும். யானை சாணத்திலும் இவை நிறைய இருக்கும். அவற்றை வண்ணத்துப்பூச்சிகள் விரும்பி உண்ணும். ஆனால், தொடக்க நிலை வறட்சியிலேயே வண்ணத்துப்பூச்சி களுக்கான உணவு ஆதாரங்கள் அழிந்துபோனதால் இந்த முறை வண்ணத்துப்பூச்சிகளின் வலசை யும் நின்றுபோயிருக்கிறது. இதை வரப்போகும் வறட்சியின் முன்னறி விப்பாக எடுத்துக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி வனத்தில் முக்குருத்தி, தெங்குமரஹெடா, ஆனைக்கட்டி, திருநெல்வேலி மாவட்டம் செங் கோட்டை பாலருவிக்கு மேலே தென்மலை ஆகிய இடங்களுக்கும் வண்ணத்துப்பூச்சிகள் இந்த முறை வரவில்லை.
இயற்கை மீதான மனிதத் தாக்கு தல் இதற்கெல்லாம் முக்கிய கார ணம். காவிரியின் பிறப்பிடமான கூர்க்கில் மட்டும் சமீபத்தில் 70,000 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. சோலைக்காடுகளை ஒட்டிய மலைவாசஸ்தலங்களில் கான்கிரீட் கட்டிடங்கள் பெருகிவிட்டன. சபரிமலையில் விமான நிலையம் கட்ட ஏற்பாடு நடக்கிறது.
வடிவழகன்
வழக்கமாக கோடையில் ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு கீழே இருக்கும் இலையுதிர் காடுகள் மட்டுமே காய்ந்திருக்கும். ஆயிரம் மீட்டருக்கு மேலே இருக்கும் சோலைக் காடுகள் ஈரப்பதத்தை தக்கவைத்திருக்கும். அங்கிருக்கும் நீர் நிலைகளில் தண்ணீர் இருக்கும். விலங்குகள் அங்கு இடம்பெயர் வதன் மூலம் உயிர் பிழைக்கும். இந்த முறை சோலைக்காடுகளும் வறண்டுவிட்டன. குடிக்க தண்ணீர் இல்லாமல் யானைகள் இறக்கின் றன. கீழே சமவெளிக்காடுகளில் புற்கள் காய்ந்துகிடக்கின்றன.
பறவைகள், வண்ணத்துப்பூச்சி கள், எறும்புகள், கரையான்கள் இவை எல்லாம் இயற்கை நிகழ்வு களை முன்கூட்டியே எடுத்துரைக் கும் வழிகாட்டிகள். எப்போதும் வலசை வரும் வண்ணத்துப் பூச்சிகளை இப்போது காண வில்லை. அவை சொல்ல வருவதை எப்போது நாம் புரிந்துகொள்ளப் போகிறோம்?
மகரந்த சேர்க்கை...
இந்தியாவில் வண்ணத்துப்பூச்சிகள் அதிகபட்சம் 300 கி.மீ. வரை வலசை செல்கின்றன. தமிழகத்தில் வண்ணத்துப்பூச்சிகள் 100 கி.மீ. வரை வலசை செல்கின்றன. வண்ணத்துப்பூச்சியின் சராசரி ஆயுள்காலம் 4 - 6 மாதங்கள். இந்த காலக்கட்டத்தில், புழுவாக இருக்கும் முதல் ஒன்றரை மாதம் தவிர்த்து, எஞ்சிய காலம் முழுவதும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான முறை மகரந்த சேர்க்கையில் ஈடுபடுகின்றன. இதன்மூலம் வனத்தின் பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவுகிறது. குறிப்பாக, மாற்று மகரந்த சேர்க்கை மூலம் இயற்கையான மரபணு மாற்றுப் பயிர்களும் பூக்களும் மனிதர்களுக்கு கிடைக்கின்றன.