தமிழகம்

நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தேவை: ஞானதேசிகன்

செய்திப்பிரிவு

மழைக்கால நிவாரண நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை உரிய காலத்தில் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னையில் கடந்த 3 நாட்களாக மக்கள் படும் அவதி சொல்லி மாளாது. குண்டும் குழியுமான சாலைகள், தூர்வாராத கால்வாய்கள், முழங்கால் வரை தேங்கியுள்ள நீர், போக்குவரத்து நெரிசல் என சென்னை மாநகர் சீர்குலைந்துள்ளது.

இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி முன் கூட்டியே மேற்கொண்டிருக்க வேண்டும்.

தற்போது போர்க்கால அடிப்படையில் பணிகளை செய்ய வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT