தமிழகம்

அண்ணா சாலை அஞ்சலகத்தில் டெபிட் கார்டுகளை பயன்படுத்த வசதி

செய்திப்பிரிவு

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ரொக்கமில்லா பரிவர்த்தனையில் இந்திய அஞ்சல் துறையின் பங்களிப்பாக டெபிட், கிரெடிட் கார்டுகளை அஞ்சலகத்தில் பயன்படுத்தும் புதிய வசதி அண்ணாசாலை அஞ்சலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பதிவு தபால், விரைவு தபால், வெளி நாட்டு அஞ்சல் சேவைகளை பொதுமக்களும், வாடிக்கையாளர் களும் பயன்படுத்திக் கொள்ள லாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT