தமிழகம்

ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க கோரி ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் கடையடைப்பு: சங்கரன்கோவிலில் விசைத்தறிகள் இயங்கவில்லை

செய்திப்பிரிவு

ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்க வலியுறுத்தி கரூரில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் நேற்று நடத்திய கடையடைப்புப் போராட்டத்தால் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஜிஎஸ்டியில் இருந்து விலக் களிக்க வலியுறுத்தி கரூர் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம், கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தி யாளர்கள் சங்கம், நூல் வணிகர் கள் சங்கம், டைஸ் அண்ட் கெமிக் கல்ஸ் சங்கம் உள்ளிட்ட ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்கள் கரூரில் நேற்று ஒருநாள் கடை யடைப்பு நடத்தின. இதனால், இந் நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ள சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன.

இதுகுறித்து, கரூர் நெசவு மற் றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் எஸ்.சுரேந்தர் கூறியபோது, “நெசவு, கைத்தறி ஏற்றுமதி நிறுவனங்கள் 500, இவற்றைச் சார்ந்தவை 1,500 என 2,000 கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. இவற்றில் 50,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்ற னர். ஒரு நாள் கடையடைப்பால் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

விசைத்தறி கூடங்கள்

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் 5 ஆயிரத்துக் கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

நாளொன்றுக்கு ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக துணி உற்பத்தி நடைபெறுகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

ஜூலை 1 முதல் அமலாகவுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பின்படி, துணி நூல் மற்றும் துணி விற்பனை செய்பவர்களுக்கு 5 சதவீதமும், பாவு எடுத்து ஒப்பந்த முறையில் வேலை செய்பவர்களுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்பட உள்ளது. சங்கரன்கோவிலில் பெரும்பாலும் ஒப்பந்த முறையில், கூலிக்கு துணி உற்பத்தி செய்து கொடுப்பவர்களே அதிகம். இவர்களுக்கு தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து இவர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கரன்கோவிலில் அனைத்து விசைத்தறி கூடங்களும் நேற்று மூடப்பட்டிருந்தன.

விசைத்தறி தொழிலோடு சம்பந்தப்பட்ட சாயப்பட்டறைகள், பாவு உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட தொழிற்கூடங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. பல லட்சம் மதிப்புக்கு துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT