தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 1.45 கோடி டன் உணவு தானி யம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வேளாண்மைத் துறை அமைச் சர் ஆர்.துரைக்கண்ணு தெரிவித் தார்.
தஞ்சாவூரில் சம்பா தொகுப்பு திட்ட தொடக்க விழா, விவசாயி களுக்கு இடுபொருட்கள் வழங் கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, ஆட்சியர் அண்ணா துரை தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார். இதில், 18 விவசாயி களுக்கு சான்று பெற்ற நெல் விதையை மானிய விலையில் வழங்கி அமைச்சர் ஆர்.துரைக் கண்ணு பேசியதாவது:
காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் வரவில்லை. ஆனாலும் விவசாயிகள் சோர்ந்துவிடக் கூடாது என்பதற்காக குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க ரூ.54.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 3.14 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
அதேபோல, சம்பா தொகுப்புத் திட்டத்தின் கீழ் ரூ.64.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வேளாண் உற் பத்தியை பெருக்கவும், உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட் டுள்ளது.
2015-16ம் ஆண்டில் 1.30 கோடி டன் நெல் உற்பத்தி செய்யப்பட் டது. நடப்பு ஆண்டு 1.45 கோடி டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது.
இந்த ஆண்டு நிர்ண யிக்கப்பட்ட இலக்கை எய்த விவசாயிகளும், வேளாண் துறை யினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.