தமிழக அரசு மின் உற்பத்தியிலும் மின் விநியோகத்திலும் தன்னிறைவு அடைந்துள்ளதாக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக பட்ஜெட் 2017 - 2018, சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
நிதிநிலை அறிக்கையை வாசித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு மின் உற்பத்தியிலும் மின் விநியோகத்திலும் தன்னிறைவு அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் இணைந்ததன் மூலம் தமிழக அரசு ரூ.1335 கோடி சேமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.