மருத்துவ பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி டாக்டர்கள் நடத்திவரும் போராட்டத்தால் அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் பணி யாற்றும் டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை பெற அவசர சட்டத்தை இயற்ற வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்ந்து கிடைத்திட சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மற்றும் அரசு மருத்துவர்கள் மற் றும் பட்டமேற்படிப்பு மருத்துவர் கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதி யாக சென்னை மருத்துவக் கல்லூரி யில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. சென்னையில் உள்ள 4 அரசு மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் புறநோயாளிகள் பிரிவு மற்றும் திட்டமிட்ட அறுவைச் சிகிச்சைகளை புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டம் பற்றி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறும்போது, “எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை புறநோயாளிகள் பிரிவு மற்றும் திட்டமிட்ட அறுவைச் சிகிச்சைகளை புறக்கணித்து தொடர்ந்து போராட்டம் நடைபெறும். 24-ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
தலைவர்கள் ஆதரவு
தமிழ்நாடு மருத்துவ அலுவலர் கள் சங்கத்தின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களில் பணியாற்றும் ஆயிரத்துக் கும் மேற்பட்ட டாக்டர்கள் 50 சத வீத இடஒதுக்கீட்டை வழங்கக் கோரி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா ளர் இரா.முத்தரசன், புதிய தமிழ கம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி, சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு ஆகியோர் டிஎம்எஸ் வளாகத்துக்கு நேரில் வந்து டாக்டர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.