தமிழகத்தில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும் என வசந்தகுமார் பேசியதால், சட்டப்பேரவையில் சிரிப்பலை உருவாகியது.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீ்ர்மானத்தின் மீது நான்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச்.வசந்தகுமார் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, அவையை நடத்திக்கொண்டு இருந்த பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், விரைவில் உரையை முடிக்கும்படி வசந்தகுமாரிடம் கூறிக்கொண்டு இருந்தார்.
அப்போது பேசிய வசந்தகுமார்,‘‘ஆளுங்கட்சியைப்போல் எங்களுக்கும் வாய்ப்பு தாருங்கள். நிச்சயமாக காங்கிரஸ் ஒருநாள் ஆள வரும். நாங்கள் ஆட்சியமைப்போம். நம்பிக்கையோடுதான் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம்’’ என்றார்.
வசந்தகுமார் பேச்சால், பேரவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை உருவாகியது.