தமிழகத்தில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வேலூர், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெயில் அதிகமாக உள்ளது.
வியாழக்கிழமை காலை 8.30 வரை பதிவான வெப்ப நிலவரப்படி, வேலூரில் அதிக பட்சமாக 101.84 ஃபாரன் ஹீட் பதிவாகியுள்ளது. இதே போன்று, மதுரை, பாளையங் கோட்டை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் 98.96 ஃபாரன்ஹீட், சேலத்தில் 99.14 ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. வரும் வாரத்தில் வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.