ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தின் போது தீக்கிரையான மீன் சந்தைக்கு பதில் நடுக்குப்பத்தில் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மீன் சந்தையை அமைச் சர் ஜெயக்குமார் நேற்று திறந்து வைத்தார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், இளை ஞர்கள், மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தினர். போராட்டத் தின் இறுதியில் கடந்த மாதம் 23-ம் தேதி சென்னையில் வன்முறை வெடித்தது. இதில். நடுக்குப்பம் பகுதியில் இருந்த மீன் சந்தை மற் றும் வாகனங்கள் தீக்கிரையாகின.
இந்நிலையில் நடுக்குப்பம் பகுதி யில் ரூ.70 லட்சம் மதிப்பில் நிரந்தர மீன் சந்தை அமைக்கப்படும் என்றும், முன்னதாக தற்காலிக மீன் சந்தை ஓரிரு நாளில் அமைக்கப்படும் என் றும் சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந் தார். இதைத்தொடர்ந்து, தற்காலிக மாக, ரூ.10 லட்சம் செலவில் மீன் சந்தை அமைக்கும் பணிகளை மீன்வளத்துறை மேற்கொண்டது. ஏற்கெனவே தீக்கிரையான மீன் சந்தை அமைந்துள்ள பகுதிக்கு அருகில், இந்த தற்காலிக மீன் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. 88 கடை களைக் கொண்ட இந்த மீன் சந்தையை மீன்வளத்துறை அமைச் சர் டி.ஜெயக்குமார் நேற்று காலை திறந்து வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இங்கு பாதிக்கப்பட்ட மீனவர் களுக்கான நிவாரணம் வழங்கு வதற்காக, கள ஆய்வு மேற்கொள் ளப்படுகிறது. அதில் மீன்பிடி உபகரணங்கள், மீனவர்களுக்கான பாதிப்புகள் ஆய்வு செய்யப்படு கிறது. ஆய்வு முடிந்ததும் நிவாரணம் வழங்கப்படும். கடலில் எண்ணெய்ப் படலம் உள்ளதால் மீன்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. கடலுக்கு அடியில் வாழும் ஆமைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அவ்வாறு பாதிக்கப்படும் ஆமைகள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
தற்போது எண்ணெய் பட லத்தை அகற்றும் பணியில் 1,500 பேர் ஈடுபட்டுள்ளனர். நடுக்கடலில் எண்ணெய் படலம் இருந்தால் அதைப் பரவவிடாமல், வளையம் அமைத்து, சூப்பர் சக்கர் இயந்திரம் மூலம் அகற்றிவிடலாம். இது கரையோரம் என்பதால், அலையின் காரணமாக அடித்து வரப்படும் எண்ணெய் படலத்தை சூப்பர் சக் கரை பயன்படுத்தி அகற்ற முடியாது. எனவே, ஆட்களைக் கொண்டு அகற்றப்படுகிறது. இதுவரை 45 மெட்ரிக் டன் அகற்றப்பட்டுள்ளது. மேலும் 20 டன் அகற்ற வேண்டி யுள்ளது.