தமிழகம்

அரசியல் ஆதாயத்துக்காக திராவிடம் பேசுகிறது திமுக: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு

செங்கல்பட்டில் திருமண நிகழ்ச்சி யில் கலந்து கொள்வதற்காக வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: ஒட்டு மொத்த தமிழகமும் மர்மமாகவே உள்ளது. எதிர்க்கட்சிகளும் மர்ம மான முறையில் சில காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன.

திமுக எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறுகிறது. தற்போது திமுக தமிழகத்தில் கால் ஊன்ற முடியாத நிலையில் இருக்கிறது. திராவிடத்துக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக் கும் திமுக துரோகம் இழைத் துள்ளது. அரசியல் ஆதாயத்துக் காக மட்டுமே திராவிடத்தை பேசுகிறது. திராவிடத்துக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

SCROLL FOR NEXT