தமிழகம்

கர்நாடக வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: முன்னெச்சரிக்கையாக 10 பேர் கைது

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் நகருக்கு பட்டுச் சேலை வாங்கவும், சுற்றுலாவுக் காகவும் வரும் கர்நாடக மாநில வாகனங்களுக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்கி வருகின்ற னர். முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக 10-க்கும் மேற்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவிரியில் தண்ணீர் திறப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாட காவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்துக்கு வரும் கர்நாடக வாகனங்களுக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்கி வரு கின்றனர். இதன்படி, காஞ்சிபுரம் நகருக்குள் பட்டுச் சேலைகள் வாங்கவும், சுற்றுலாவாகவும் வரும் கர்நாடக வாகனங்களுக்கு, ஏஎஸ்பி நாதா தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

நகருக்குள் வரும் கர்நாடக வாகனங்கள் மீண்டும் பாது காப்புடன் வெளியே செல்லும் வகையில், ரோந்து போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்ற னர். காந்தி சாலையில் அசம்பா விதங்கள் ஏற்படாமல் இருக்க போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

wமுன்னெச்சரிக்கை நட வடிக்கையாக, தமிழக வாழ்வுரிமை கட்சியின் துணைச் செயலாளர் தீனன் உட்பட அக்கட்சியினர் 10-க் கும் மேற்பட்டோரை விஷ்ணு காஞ்சி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து, ஏஎஸ்பி ஸ்ரீநாதா விடம் கேட்டபோது, ‘காஞ்சி நக ருக்குள் வரும் கர்நாடக மாநில வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் போலீ ஸார் வாகனங்களில் ரோந்து வரு கின்றனர். காந்தி சாலையில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக சீருடை அல்லாத போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT