தமிழகம்

திருப்பூரில் வீட்டுப் பத்திரம் தொடர்பான பிரச்சினையில் பெண் தற்கொலை முயற்சி

செய்திப்பிரிவு

திருப்பூர் முருகம்பாளையத்தைச் சேர்ந்த மசிரியம்மாள் (40) என்ற பெண் வீட்டுப் பத்திரம் தொடர்பாக குடும்பத்தாருடன் எழுந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

திரூப்பூரை சேர்ந்த மசிரியம்மாள் (40) கணவரை இழந்தவர். இவருடைய மகள் நந்தினி என்ற நிறைமாத கர்பிணியாக உள்ளார்.

மசிரியம்மாளுக்கும் அவருடைய சின்ன மாமியாருக்கும், வீட்டுப் பத்திரம் தொடர்பாக நீண்ட நாளாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. மூன்று லட்சம் கொடுத்தால்தான் வீட்டு பத்திரத்தை தர முடியும் என்று மசிரியம்மாளை அவரது உறவினர்கள் மிரட்டியுள்ளனர்.

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று (திங்கட்கிழமை) புகார் மனு அளிக்க வந்த மசிரியம்மாள் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அவருடன் அவரது மகள் நந்தினியும் உடனிருந்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மசிரியம்மாளை தடுத்து நிறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக புகார் மனு அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT