ராம்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, புழல் பகுதியைச் சேர்ந்த தேமுதிக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நேற்று காலை மத்திய சிறையை முற்றுகையிட முடிவு செய்தனர். இதற்காக புழல் அம்பேத்கர் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
அப்போது, தமிழக அரசைக் கண்டித்தும் சுவாதி கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீ ஸார் தடுத்து கைது செய்து, அருகே இருந்த மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.