தமிழகம்

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு ஜூன் 23-ம் தேதி நேர்காணல்

செய்திப்பிரிவு

அஞ்சல் துறை சேவைகளான அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்கான நேரடி முகவர் பணிக்கான நேர்காணல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தப் பணிக்கு விண்ணப் பிக்க விரும்புபவர்கள் 12-ம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான கல்வித் தகுதி பெற்று இருக்க வேண்டும். 5 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை உள்ள பகுதிகளில் பத்தாவது அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி பெற்று இருக்க வேண்டும். இந்தப் பணிக்கான வயது வரம்பு 18-லிருந்து 65 வரை.

யார் விண்ணப்பிக்கலாம்?

வேலையில்லா, சுயதொழில் புரியும் இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டுக் குழுமத்தின் முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முன் னாள் முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல் பணியா ளர்கள், சுய உதவிக் குழுக்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம். தொழில் செய்ய விரும்பும் அஞ்சல் துறை ஊழியர் களும் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணிக்கான நேர் காணல் அஞ்சல் துறை, தாம்பரம் வட்டாரத்தின் மூத்த கண்காணிப்பாளர் அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் நேர்காண லின்போது தங்கள் கல்வி தகுதி மற்றும் பிற விவரங்கள் தொடர்பான சான்றிதழ்கள், ஆவணங்களுடன் 2 புகைப்படங்களை சமர்ப் பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-22266525 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம். பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT