தமிழகம்

வாகன நிறுத்தம் இல்லாத உணவகங்களை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் லோகு என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னை மாநகரின் பெரும் பாலான பிரதான சாலைகளில் உள்ள பிரபலமான உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங் களை சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. ஆனால், இதுவரை அந்த உணவகங்கள், தங்கள் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. இதற்கு மேல் காத்திருக்க முடியாது. எனவே வாகன நிறுத்தம் இல்லாத உணவகங்களை சென்னை மாநகராட்சியும், மாநகர போலீஸாரும் உடனடியாக இழுத்து மூட வேண்டும். ஒருவேளை உணவகங்கள் வாகன நிறுத்துமிடங்களை உடனடியாக ஏற்பாடு செய்து கொண்டால் அந்த உணவகங்கள் மீதான நடவடிக்கையை கைவிடலாம்’’ என உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT