தமிழகம்

கனிமொழியுடன் அன்புமணி சந்திப்பு

செய்திப்பிரிவு

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் திருமணம், அக்.30-ம் தேதி மாமல்லபுரத்தில் நடக்கிறது.

இதற்காக பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்களுக்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

திமுக எம்.பி., கனிமொழியை சென்னை சிஐடி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அன்புமணி நேற்று சந்தித்தார்.

அப்போது, தனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்து, திருமணத்துக்கு வருமாறு அழைத்தார். அப்போது, கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் உடன் இருந்தனர்

SCROLL FOR NEXT