மக்களின் பிரச்சினை களை தீர்க்க எளிய வழியாக மத்தியஸ்தம், பேச்சுவார்த்தை போன்றவை உள்ளன என உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் ஆர்.தவே தெரி வித்துள்ளார்.
தேசிய சட்டப் பணிகள் ஆணையம் மற்றும் புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணையம் இணைந்து நடத்தும் தென்மாநிலங் களின் சட்டப் பணிகள் ஆணைய சீராய்வு குறித்த 2 நாள் மாநாடு புதுச்சேரியில் நேற்று தொடங்கிய து. உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச் சந்திரன் வரவேற்றார். புதுச்சேரி தலைமை நீதிபதி கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டை உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் ஆர்.தவே தொ டங்கி வைத்து பேசியதாவது:
நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. நீதிபதிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதுபோன்ற சூழலில் மத்தியஸ்தம், பேச்சுவார்த்தை போன்றவை பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க எளிய வழியாக உள்ளது. மோட்டார் வாகன வழக்குகளில் மக்கள் நீதிமன்றங்கள் மூலம் மத்தியஸ்தம், பேச்சுவார்த்தை நடத்தி பரிகாரம் காண்பது சிறப்பானதாகும். இதனால் நீதிமன்றங்களில் வழக் குகள் தேக்கம் குறையும். நீதி மன்றங்களின் வேலைப்பளுவும் குறையும் என்றார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, பேசும்போது, “ஏழை, எளியோருக்கு நியாயமான, துரி தமான நீதி கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதில் சட்டப் பணிகள் ஆணையத்தின் சேவை பாராட்டுக்கு உரியது. படித்தவர்களுக்கும் கூட சட்ட அறிவு இல்லை. அவர் களுக்கு சட்ட அறிவு ஏற்படுத்த வேண்டியது அவசியம். மக்கள் நீதிமன்றங்கள் மூலம் குடும்ப வழக் குகள், மோசடி, முறைகேடுகள் தொடர்பான வழக்குகளுக்கு தீர்வு காணலாம்” என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் பேசும்போது, ‘‘சட்டப் பணிகள் ஆணையத்தின் செயல் பாடுகளை தற்போதைய காலத் துக்கு ஏற்றவாறு மேம்படுத்த வேண்டியுள்ளது. நீதித்துறை முன் பல்வேறு சவால்கள் உள்ளன. மக்களுக்கு சட்ட உரிமைகள் குறித்த விழிப்பணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது. பெண்கள், ஒடுக் கப்பட்டோர் மீதான பிரச்சினைக ளைத் தடுக்க சட்டங்கள் இருந்தா லும், அவற்றால் உடனே பயன் கிடைப்பதில்லை. வாதிகளுக்கு முறையான விரைவான நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
மூத்த வழக்கறிஞர்கள் சட்டப் பணிகள் ஆணைய சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். சட்டப் பணிகள் ஆணையத்தின் மக்கள் நீதி மன்றங்கள் மூலம் அனைத்து வகையான பிரச்சி னைகளுக்கும் தீர்வு காணலாம்.
வழக்கறிஞர்கள் பிரச்சினைக ளுக்கு தீர்வு காண வழிமுறைகள் இருக்கின்றன. நீதிமன்ற புறக்க ணிப்புப் போராட்டங்களால் நீதித் துறையின் மீது இருக்கக்கூடிய நம்பிக்கையை மக்கள் இழந்து கட்டப்பஞ்சாயத்து போன்று மாற்று வழிக்கு செல்ல வழி வகுத்துவிடக் கூடாது’’ என்றார்.
புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி பேசும்போது, ‘‘நம் நாட்டு குடிமக்களில் 70 சதவீதம் பேருக்கு தங்களுக்கு உள்ள சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு இல்லை. இது போன்ற சூழலில் சட்டப்பணிகள் ஆணையத்தின் சேவை மிகவும் அவசியமாகிறது” என்றார்.
பாலியல் தொழில், ஆள் கடத் தலால் பாதிக்கப்படுவோருக்கு உதவுவது தொடர்பான விழிப் புணர்வு முகாம் நடைபெற்றது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் மதிவாணன், சொக்கலிங்கம் ஆகியோர் சிறப் புரையாற்றினர். இன்றும் (24-ம் தேதி) மாநாடு நடைபெறுகிறது. தென்மாநில உயர் நீதிமன்றங்க ளின் நீதிபதிகள், மூத்த வழக்கறி ஞர்கள் பங்கேற்றுள்ளனர்.