அட்டப்பாடி பகுதியில் கேரள அரசு 6 தடுப்பணைகளை கட்டி வருகிறது. இதனால் தமிழகத்தில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சில பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, சாவடியூர் முதல் முள்ளிவரையிலான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்தப் பகுதிகளில் மோட்டாரைப் பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சக்கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், அப்பகுதி விவசாயிகள் முறைப் பாசனம் மூலமாக தண்ணீரைப் பயன்படுத்தினர். எனினும், இந்த முறையை அனைவரும் சரிவர கடைப்பிடிக்காததால் பிரச்சினை கள் ஏற்பட்டன. இதற்கிடையில், மோட்டார் மூலமாக தண்ணீர் உறிஞ்சிய சாவடியூர் விவசாயி கள் சிலரின் விவசாய மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, அகழி, புதூர் விவசாயி களிடையே பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, விவசாயிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் கலந்துபேசி, புதிய முடிவெடுத்துள் ளனர். அதன்படி, ஞாயிறு, வியாழக் கிழமைகளில் குடிநீரைத் தவிர வேறு பயன்பாட்டுக்கு மோட்டார் மூலமாக தண்ணீரை உறிஞ்சக்கூடாது என தீர்மானித்துள்ளனர். மற்ற நாட்களிலும் முறைவைத்து தண்ணீர் எடுப்பது எனவும், விவசாயத்துக்கு தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ், மலையாளத்தில் துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து, விவசாயிகளிடையே விநியோகம் செய்தனர். அதில், வறட்சியால் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், வாரத்தில் 2 நாட்களுக்கு மோட்டாரை உபயோகப்படுத்தக் கூடாது, தண்ணீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கட்டுப்பாடு பசுவய்யன வாய்க்கால் உள்ளிட்டவற்றும் பொருந்தும். இதற்கு எதிராக செயல்பட்டால், மோட்டார் பறிமுதல் செய்யப்படும். இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறும்போது, “பசுவய்யன வாய்க்கால் மூலமாக அகழி பஞ்சாயத்தில் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு செம்மண்ணூர் வரை சுமார் 1,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கோடையில் பவானியில் வரும் தண்ணீரில் பாதியளவு நீர் இந்த வாய்க்காலுக்கே செல்கிறது. மீதமுள்ள தண்ணீரே முக்காலி, தாவளம், தேக்குவட்டை, மஞ்சிக்கண்டி, சாவடியூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்கிறது.
இதுவரை இந்தப் பிரச்சினை பெரிய அளவில் எழவில்லை. இப்போதுதான் முதல்முறையாக பசுவய்யன வாய்க்கால் பாசனத் துக்குக்கும் கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பசுவய்யன வாய்க்கால் பகுதி விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தாலோ, விதி மீறும்போது மோட்டார்கள் துண்டிக்கப்பட்டாலோ புதிய பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது” என்றனர்.