மாமல்லபுரம் அருகே ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண் ஒரு வரை, இரு இளைஞர்கள் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார். அப்போது, மாமல்லபுரம் அருகே சூனேரிக்காடு பகுதியில் உள்ள கடற்கரையில் சூரிய குளியலில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்பித்து மாமல்லபுரம் வந்தார்.
பிறகு, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். தகவல் அறிந்த டிஐஜி, காஞ்சி புரம் மாவட்ட எஸ்பி ஆகியோர் மாமல்லபுரம் காவல்நிலையத் துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
சம்பவம் தொடர்பாக 3 இளைஞர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.