தமிழகம்

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா அக்.24-ல் தொடக்கம்

செய்திப்பிரிவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா வரும் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. 24-ம் தேதி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலிலேயே தங்கி விரதம் இருப்பர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.

கந்த சஷ்டி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் ம.ரவிக்குமார் தலைமை வகித்து பேசும்போது, `கந்த சஷ்டி விழாவுக்கு இந்த ஆண்டு 8 லட்சத்துக்கும் அதிகமான பக்தர் கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர் களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வசதி செய்துதர வேண்டும். கூடுதல் சின்டெக்ஸ் தொட்டி கள் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் நிறுவ வேண்டும். தற்காலிக கழிப்பறை களை அமைக்க வேண்டும்.

29-ம் தேதி சூரசம்ஹாரம் தினத்தன்று சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். காவல்துறை, பக்தர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண் டும். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அனைத்துத் துறை அலுவலர் களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கோயில் நிர்வாகம் தனது வருமானத்தில் 50 சதவீதத்தை பக்தர்களின் அடிப்படை வசதிக் காக செலவிட வேண்டும், என்று ஆட்சியர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT