தமிழகம்

மீனவர்கள் மரண தண்டனை எதிரொலி: ராமேசுவரத்தில் தண்டவாளம் தகர்ப்பு

செய்திப்பிரிவு

5 தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து ராமேசுவரம், பாம்பன் இடையே 900மீ அளவுக்கு ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் ரயில்கள், மதுரை பாசஞ்சர் ரயில் மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட செல்லும் அந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தூக்குதண்டனை விதிக்கப்பட்ட 5 பேரும் தங்கச்சிமடத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தண்டவாளம் தகர்ப்பால் இன்று மாலை 5 மணிக்குப்பிறகு ராமேசுவரத்திலிருந்து புறப்படும் ரயில்கள் நாளை புறப்படும் என்று ரயில்வே கோட்ட அதிகாரி ரஸ்தோகி தெரிவித்துள்ளார்.

"மீண்டும் தண்டவாளங்கள் தயாராக குறைந்தது 4 மணி நேரங்களாவது ஆகும். ஆனாலும் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு நிலவரத்தை முன்னிட்டு அனுமதி வழங்கிய பிறகே பணிகள் தொடங்கப்படும்” என்றார் அவர்.

வியாழன் மாலை 5 மணிக்குப் புறப்பட வேண்டிய ராமேசுவரம் - சென்னை விரைவு ரயில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குப் புறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8 மணிக்கு புறப்படவேண்டிய சேது எக்ஸ்பிரஸ் நாளை காலை 11 மணிக்கும், ராமேசுவரம் - கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் நாளை காலை 12 மணிக்கும் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை-ராமேசுவரம் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகளுக்கு உணவு மட்டும் குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT