தமிழகம்

அமைச்சரின் உறவினர் கொலை

செய்திப்பிரிவு

புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி யின் நெருங்கிய உறவினரும் ஆதரவாளருமான வீரப்பன் வெட் டிக் கொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி - கிருமாம்பாக்கம் பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்த வர் வீரப்பன்(43). பிள்ளையார் குப்பம் பஞ்சாயத்தின் முன்னாள் கவுன்சிலரான இவர், அமைச்சர் கந்தசாமியின் உறவினர்.

வீரப்பன் தினமும் காலை தனது மோட்டார் சைக்கிளில் புதுச் சேரி சட்டப்பேரவை வளாகத் துக்கு வருவார். அங்கு அமைச்சர் கந்தசாமி அலுவலகத்தில் அவ ருக்கு தேவையான பணிகளைச் செய்வார். வழக்கம்போல நேற்று காலையும் வீரப்பன் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு புதுச்சேரி நோக்கி வந்துள்ளார்.

தமிழகப் பகுதியான காட்டுப் பாளையம் என்ற இடத்தை கடந்த போது மர்ம கும்பல் அவரை வழி மறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அங்கிருந்தவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வீரப்பனைக் கொலை செய்த கும்பல் அவர் ஓட்டி வந்த மோட் டார் சைக்கிளையும் எடுத்துச் சென்றுள்ளதாக போலீஸார் தெரி வித்தனர். இக்கொலை தொடர் பாக ரெட்டிச்சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த அமைச்சர் கந்தசாமியும் அவரது ஆதரவாளர்களும் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட முன் விரோதமே கொலைக்கு காரணம் என்று அமைச்சர் கந்தசாமி தெரி வித்துள்ளார்.

SCROLL FOR NEXT