தமிழகம்

பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் சந்திப்பு: தமிழக முதல்வர், அமைச்சர்களை தகுதியிழப்பு செய்ய உத்தரவிட முடியாது- உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

செய்திப்பிரிவு

சிறையில் உள்ள சசிகலாவை சந்தித் துப் பேசினார்கள் என்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி மற்றும் 4 அமைச்சர்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யுமாறு ஆளுநர், சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டம், வில்லி புத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனியின் மகன் ஆணழகன் உயர் நீதிமன்ற கிளை யில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசி கலாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட் டையன், செல்லூர் கே.ராஜு, திண்டுக்கல் சி.சீனிவா சன், ஆர்.காமராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இதனால் முதல்வர் மற்றும் 4 அமைச்சர்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் வாதிடும்போது, எம்எல்ஏக்களைத் தகுதியிழப்பு செய்ய ஆளுநர், சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிடுவதற்கு உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், அரசியலமைப்பு சட்டப்படி முதல்வர், அமைச்சர்களை தகுதி யிழப்பு செய்யுமாறு ஆளுநர், சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிடுவதற்கு இந்த நீதிமன் றத்துக்கு அதிகாரம் இல்லை. அப்படி அதிகாரம் உள்ளது என்ப தற்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகல்கள் இருந்தால் தாக்கல் செய்யவும், மனுதாரர் அளித்த மனு மீது சட்டப்பேரவைத் தலைவர் மேற்கொண்ட நடவடிக்கை விவரங் களைக் கேட்டு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை ஏப். 28-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT