தமிழக காங்கிரஸுக்கு புதிதாக 72 மாவட்டத் தலைவர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலுடன் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி யின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஜனார்த்தன திவேதி அறிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸில் புதிதாக 11 மாவட்டங்கள் உருவாக்கப்பட் டுள்ளன. மத்திய சென்னை மாவட் டம் சென்னை கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டத் தலைவர்களில் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதர வாளர்கள் கூண்டோடு மாற்றப்பட் டுள்ளனர். தற்போதைய தமிழக காங் கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் அதிக அளவில் மாவட்டத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
எம்.எஸ்.திரவியம் (வட சென்னை), கராத்தே ஆர்.தியாகராஜன் (தென்சென்னை), சிவராஜசேகரன் (சென்னை கிழக்கு), வீரபாண்டியன் (சென்னை மேற்கு), ஏ.ஜி.சிதம்பரம் (திருவள்ளூர் வடக்கு), மகேந்திரன் (திருவள்ளூர் மத்தி), பி.ஜேம்ஸ் (திருவள்ளூர் தெற்கு), ரூபி மனோகரன் (காஞ்சிபுரம் வடக்கு), ஆர்.சுந்தரமூர்த்தி (காஞ்சிபுரம் தெற்கு), ஜி.வி.மதியழகன் (காஞ்சிபுரம் மேற்கு). உள்ளிட்ட 72 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.