தமிழகம்

ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் மாயம்

செய்திப்பிரிவு

கடலில் மீன் பிடிக்கச் சென்ற, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் காணாமல்போனது குறித்து கடலோரக் காவல் படையினர் விசாரித்து வருகின்றனர்.

ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் 250 விசைப்படகுகளில் நூற்றுக் கணக்கான மீனவர்கள் கட லுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். பின்னர், நேற்று மீண்டும் கரைக்குப் புறப்பட்டுள்ளனர். அப்போது, பலமான காற்று வீசியுள்ளது. இதனால் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் 2 படகுகள் சிக் கின. அதில் ஒரு படகு மூழ்கியது.

மூழ்கிய படகிலிருந்து கடலில் குதித்து தத்தளித்த மீனவர்கள் ராம்குமார், பாபு, சுந்தரம், ஆனந்தம், செல்வம் ஆகியோரை, அங்கு வந்த சக மீனவர்கள் காப்பாற்றி, கரைக்கு அழைத்து வந்தனர். ஆனால், மற்றொரு படகு நேற்று மாலை வரை கரை திரும்ப வில்லை. அதில் சென்ற நான்கு மீனவர் களை தேடும் பணியில் கட லோரக் காவல் படையினர் ஈடு பட்டுள்ளனர். இச்சம்பவம் மீனவர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT