தமிழகம்

அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா தேர்வு: 37 புதிய நிர்வாகிகள் நியமனம்

செய்திப்பிரிவு

அதிமுகவின் பொதுச்செயலாள ராக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய நிர்வாகிகளாக 37 பேரை நியமித்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் 32 ஆண்டுகளுக்குப் பின், ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்த நிகழ்வு தற்போது நடந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியமைத் தது. முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலை யில், அதிமுகவில் பல்வேறு நிலைகளிலும் நிர்வாக ரீதியாக மாற்றங்களை முதல்வர் ஜெய லலிதா செய்துள்ளார்.

இதன்படி, அதிமுக பொதுச் செயலாளராக மீண்டும் ஜெய லலிதா தேர்வாகியுள்ளார். இவரைத் தவிர மேலும், 37 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவைத்தலைவராக இ.மதுசூத னன், பொருளாளராக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி, கொள்கை பரப்புச் செயலாளராக மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அமைப்புச் செயலாளர்களாக ஆர்.வைத்திலிங்கம் எம்.பி, விசா லாட்சி நெடுஞ்செழியன், செ.செம் மலை, என்.தளவாய் சுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, ஏ.கே.செல்வராஜ் எம்.பி, நாமக்கல் மாவட்டம் எஸ்.ராஜூ, டாக்டர் கே.கோபால் எம்.பி, அமைச்சர் எஸ்.வளர்மதி, பா.நாராயண பெருமாள், சுதா கே.பரமசிவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக அ.தமிழ்மகன் உசேன், தேர்தல் பிரிவு செய லாளராக பொள்ளாச்சி வி.ஜெய ராமன், விவசாய பிரிவு செய லாளராக துரை கோவிந்தராஜன், இலக்கிய அணிச் செயலாளராக பா.வளர்மதி, அண்ணா தொழிற் சங்க பேரவை தலைவராக தாடி.ம.ராசு, செயலாளராக ஆர்.சின்னச்சாமி ஆகியோர் நியமனமாகியுள்ளனர்.

சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவராக ஏ.ஜஸ்டின் செல்வராஜ், செயலாளராக ஏ.அன்வர் ராஜா எம்.பி, ஜெயலலிதா பேரவை செயலாளராக ஆர்.பி.உதயகுமார், மருத்துவ அணி செயலாளராக பி.வேணுகோபால் எம்.பி, வழக்கறிஞர் பிரிவு தலைவராக வி.எஸ்.சேதுராமன், செயலாளராக ஏ.நவநீதகிருஷ்ணன் எம்.பி, மீனவ பிரிவு செயலாளராக நீலாங்கரை எம்.சி.முனுசாமி, மகளிர் அணி செயலாளராக விஜிலா சத்தியானந்த் எம்.பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளராக ஆர்.கமலக்கண்ணன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செய லாளராக ப.குமார் எம்.பி, மாணவர் அணி செயலாளராக எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., எம்ஜிஆர் இளைஞரணி செயலாளராக பி.கே.வைரமுத்து, எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக சொரத்தூர் ஆர்.ராஜேந்திரன், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளராக ஜி.ராமச்சந்திரன், மகளிர் அணி இணைச் செயலாளராக கீர்த் திகா முனியசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

பதவி பறிப்பு

முதல்வர் ஜெயலலிதா வெளி யிட்டுள்ள அதிமுக நிர்வாகிகள் பட்டியலில், அமைப்புச் செய லாளர்களாக இருந்த சி.பொன் னையன், பண்ருட்டி ராமச் சந்திரன் பெயர்கள் இடம் பெறவில்லை. அவர்கள், செய் தித் தொடர்பாளர்களாக நிய மிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம், தலைமை நிலைய செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், மகளிர் அணி செயலாளராக இருந்த எஸ்.கோகுல இந்திரா ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

இது தவிர அதிமுகவில் மாவட்டச் செயலாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT