தமிழகம்

ஆர்.கே. நகர் தேர்தல்: மக்கள் நலக் கூட்டணி கூடி முடிவு

செய்திப்பிரிவு

ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் கூடி முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருவாரூரில் நேற்று அவர், ‘தி இந்து’விடம் கூறியது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல்12-ம் தேதி நடைபெறும் என அறி விக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாளை (இன்று) சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் செயற்குழுவில் விவாதிக்க வுள்ளோம்.

அதைத்தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மற்ற 2 கட்சிகளிடமும் விவாதித்து முடிவு எடுப்போம். மக்கள் நலக் கூட்டணி தற்போது கூட்டியக்கமாக செயல்பட்டு வருகிறது. தற்போதுகூட நெடுவாசல் திட்டத்தை எதிர்த்து அந்த பகுதியில் தனித்தனியாகவும், சேர்ந்தும் போராட்டங்களை நடத்தி யுள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT