தமிழகம்

போலி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ததாக அரசு புகார்: சசிகலா புஷ்பா குடும்பத்துடன் ஆஜராக உத்தரவு

செய்திப்பிரிவு

போலி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ததாக அரசுத் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டதால், சசிகலா புஷ்பா எம்பி குடும்பத்துடன் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் வீட்டில் பணிபுரிந்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோர் அளித்த புகாரின்பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்க கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது தூத் துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா உட்பட 3 பேரும் தனித்தனியாக உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி வி.எம்.வேலுமணி முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.புகழேந்தி வாதிட்டதாவது:

வழக்கறிஞர் தாக்கல் செய்த வக்காலத்தில் ஆக.17-ம் தேதி மதுரையில் வழக்கறிஞர் முன்னி லையில் சசிகலா புஷ்பா உட்பட 3 பேரும் ஆஜராகி கையெழுத் திட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் 3 பேரும் ஆக.16-ம் தேதியே சிங்கப்பூர் சென்றுவிட்டனர். அவர்கள் பெய ரில் போலியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மனுதாரர்கள் மீதான புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், குற்றம் நடந்திருப்பதற்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்துள்ளது. வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்தே டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா இடைக்கால முன் ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால், அந்த உறுதிமொழியை நிறைவேற் றாமல் அவர் வெளிநாடு சென்று விட்டார். இதனால் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி உள்ளது. முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்றார்.

மனுதாரரின் வழக்கறிஞர் வாதி டும்போது, “சசிகலா புஷ்பா உட்பட 3 பேரின் அறிவுறுத்தலின்பேரில் தான் இந்த மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இந்த மனுவை திரும்பப் பெறுகிறேன்” என்றார். அப்போது அரசுத் தரப்பில் ஆட் சேபம் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக் களின் வாக்காலத்தில் அவர்கள் கையெழுத்திட்டதில் சந்தேகம் இருப்பதால் அவர்கள் ஆக.29-ல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தர விட்ட நீதிபதி முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT