தமிழகம்

மக்களின் பங்களிப்புடன் நீர்நிலைகளை பராமரிக்கும் ‘குடிமராமத்து’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்: தமிழக நிதித்துறை கூடுதல் செயலர் தகவல்

செய்திப்பிரிவு

மக்களின் பங்களிப்புடன் நீர்நிலை களைத் தூர்வாரி, பராமரிக்கும் ‘குடிமராமத்து’ திட்டத்தை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த உள்ளதாக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.சண்முகம் கூறினார்.

நபார்டு வங்கியின் 35-வது நிறுவன நாள் விழா மற்றும் விவசாயி களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில், விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கி ஆளுநர் கே.ரோசய்யா பேசியதாவது:

நம் நாட்டில் ஊரகப் பகுதிகளில் 58 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியுள்ளனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம், மீன்பிடித்தல் உள்ளிட்டவற்றின் பங்களிப்பு 17 சதவீதமாக உள்ளது. எனவே, வேளாண் துறையில் வளர்ச்சி, விவசாயிகளின் வருவா யைப் பெருக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

விவசாயிகள், ஏழை மக்கள் தங்கள் தேவைக்காக தொடர்ந்து கடன் வாங்க நேரிடுகிறது. இதற் காக, அதிக வட்டிக்கு கடன் கொடுப் பவர்களை நம்பவேண்டி இருக் கிறது. எனவே, ஊரகப் பகுதிகளில் வங்கிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். சுய உதவிக் குழுக்கள் மூலம் ஏழை மக்களின் மேம்பாட்டுக்கு நபார்டு வங்கி உதவி வருவது பாராட்டத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.சண்முகம் பேசியதாவது:

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குதல், நீர் மேலாண்மை ஆகிய இரண்டும் வேளாண் துறை யில் சவாலானதாக உள்ளன. விவ சாயிகள் தங்களது வருமானத்தைப் பெருக்க கலப்புப் பண்ணை விவ சாயத்தில் ஈடுபட வேண்டும். வெறும் பயிர்களை பயிரிடுவதால் மட்டுமே நல்ல வருவாயை ஈட்ட முடியாது. கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்றவற்றிலும் விவசாயிகள் ஈடுபட வேண்டும். தற்போது விளைச்சல் குறைவாக உள்ள பருப்பு வகைகள், காய்கறிகளை விளைவிப்பதிலும் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும்.

அடுத்த சவால் நீர் மேலாண்மை. தெலங்கானா, தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் அடிக்கடி வறட்சியை சந்திக்கின்றன. எனவே, நம்மிடம் உள்ள நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாய மாக உள்ளது. முந்தைய காலங் களில் ஏரிகள், குளங்கள் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கின. நீர் நிலைகளைப் பாதுகாப்பதில் குடி மராமத்து மேலோங்கியிருந்தது. மக்களே நீர்நிலைகளைப் பரா மரித்து, தூர்வாரி வந்தனர். தற்போது அந்த முறை எங்கும் இல்லை. தற் போது நீர் ஆதாரங்களைப் பராமரிப் பதில் மக்கள் அரசை மட்டுமே எதிர்பார்க்கின்றனர்.

நீர் ஆதாரங்களைப் புதுப் பிக்க அரசு முயற்சிக்கு வருகிறது. இதற்கு நபார்டு வங்கி உதவ உள் ளது. மேலும், மக்களின் பங்களிப் புடன் நீர்நிலைகளைத் தூர்வாரி, பாதுகாக்கும் ‘குடிமராமத்து’ திட் டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT