தமிழகம்

விவசாயிகள் சங்க தற்காலிக தலைவர் ராம கவுண்டர்

செய்திப்பிரிவு

தமிழக விவசாயிகள் சங்க தற் காலிக மாநிலத் தலைவராக மாநில பொதுச் செயலாளர் ராம கவுண்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் சிவசாமி கடந்த 14-ம் தேதி காலமானார். இந்நிலையில், கிருஷ்ணகிரி அணையில் இச்சங்கத்தின் அவசரக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்துக்கு தேசிய மஞ்சள் விவசாயிகள் சங்கத் தலைவர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தின்போது, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் சிவசாமி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி, மாநில செயற்குழுவைக் கூட்டி, அடுத்த தலைவரை தேர்வு செய்யும் வரை, தற்போது மாநில பொதுச் செயலாளராக உள்ள ராம கவுண்டரை மாநிலத் தலைவராக தற்காலிகமாக நியமிக்கலாம் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT