தமிழகம்

ஓடும் பஸ்ஸில் இருந்து இறங்கிய பிளஸ் 2 மாணவன் பலி

செய்திப்பிரிவு

ஓடும் பஸ்ஸில் இருந்து இறங்கிய பிளஸ் 2 மாணவன் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

சென்னை தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் சரவணன் (17). பிளஸ் 2 தேர்வை எழுதி முடித்து விட்டு ரிசல்டுக்காக காத்திருந்தார். திங்கள்கிழமை பிற்பகல் தனது நண்பரை பார்ப்பதற்காக அவர் தரமணி சென்றார். நண்பரை பார்த்து விட்டு அங்கிருந்து பஸ்ஸில் திரும்பிக்கொண்டிருந்தார். பிராட்வே சிக்னல் அருகே பஸ் திரும்பியபோது அதில் இருந்து இறங்குவதற்காக, ஓடும் பஸ்ஸில் இருந்து அவர் குதித்துள்ளார். அப்போது நிலைதடுமாறி பேருந்தின் பின் சக்கரத்துக்குள் விழுந்த அவர் மீது சக்கரம் ஏறி இறங்கியது. உடல் நசுங்கிய நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்ப்ட்ட அவர் இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கொத்தவால்சாவடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT