தமிழகம்

தினகரன் வழக்கில் வெளிவர வேண்டிய உண்மைகள் நிறைய உள்ளன: ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கில் பல உண்மைகள் இருப்பதாகவும், விரைந்து அந்த உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த வழக்கை பொறுத்தவரை வெளிவர வேண்டிய உண்மைகள் நிறைய உள்ளன, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்று தர வேண்டும் அப்போது தான் எதிர்காலத்தில் இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட மாட்டார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருந்து நிலையில், தற்போது தினகரன் கைது தொடர்பாக வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

SCROLL FOR NEXT