உலகம் முழுவதும் இன்று உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அஞ்சலகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
‘சர்வதேச அஞ்சல் ஒன்றியம்’ சுவிட்சர்லாந்தில் 1874-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி தொடங்கப் பட்டது. அதை முன்னிட்டு உலக அஞ்சல் தினம் இன்று கொண்டாடப் படுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்தியாவில் 1.5 லட்சம் தபால் நிலையங்களிலும் இன்று முதல் 15-ம் தேதி வரை 7 நாட்களுக்கு ஏராளமான நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. தமிழகத்தில் அஞ்சல் தலை கண்காட்சி, சேமிப்பு கணக்கு நாள் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இது தவிர அஞ்சலக வர்த்தகத்தை பெருக்குவதற்கான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உலக அஞ்சல் தின கொண்டாட்டங்கள் நிறைவு பெறும் விதமாக சர்வதேச அஞ்சல் ஒன்றியத்தின் சார்பில் பள்ளி மாணவர் களுக்காக கட்டுரை போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த போட்டிகள் வரும் ஜனவரியில் நடக்கவுள்ளது.