முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் கவுதமன் ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியதற்கு நன்றி தெரிவித்தனர். மேலும் ஜல்லிக்கட்டு போராட் டம் தொடர்பாக கைது செய்யயப் பட்டவர்களை விடுவிக்கவும் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி கடந்த 17-ம் தேதி மெரினா கடற்கரையில் போராட்டம் தொடங் கியது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அறவழியில் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, கடந்த 21-ம் தேதி தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்து, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியது. தொடர்ந்து 23-ம் தேதி மாலை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நிரந்தர சட்டத் துக்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
இதற்கிடையில் மெரினாவில் இறுதிக்கட்ட போராட்டம் நடத்திய வர்களை போலீஸார் வெளி யேற்ற, வன்முறை வெடித்தது. இதில்,ஏராளமான காவல்துறை வாகனங்கள், தனியார் வாகனங் கள் தீக்கிரையாகின. தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப் பட்டது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட வர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று பிற்பகல், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவரது இல்லத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் தலைமையில் மாணவர் கள், இளைஞர்கள் சந்தித்து பேசினர். அப்போது, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுத்ததற்காகவும், மாணவர்கள் போராட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்ததற்காகவும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
சந்திப்பு குறித்து நிருபர்களிடம் கூறிய ராகவா லாரன்ஸ், “ஜல்லிக் கட்டுக்கான தடையை நீக்கியதற் காக முதல்வர் மற்றும் பிரதமரை சந்தித்து நன்றி தெரிவிக்க வேண் டும் என மாணவர்கள் விரும்பு கின்றனர். முதலில் முதல்வரை சந்தித்துள்ளோம். தமிழகம் முழுவதும், பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும். அவர்களை விடு தலை செய்ய வேண்டும். பாதிக் கப்பட்ட பொதுமக்களுக்கு நிவார ணம் வழங்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை விடுத் தோம். முதல்வரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்’’ என்றார்.
இதையடுத்து, திரைப்பட இயக்குநர் கவுதமன், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் பார்வைதாசன், பிரதீப்குமார், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மாணவர் அரவிந்த் ஆகியோர் முதல்வரை சந்தித்து நன்றி தெரி வித்தனர். மேலும் கைது செய்யப் பட்ட இளைஞர்களை விடுவிக்க வேண்டும், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் அடங்கிய மனுவையும் அளித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்க வேண்டும், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தனர்.