தமிழகம்

கூவத்தூரில் கமாண்டோ படை வீரர்கள் குவிப்பு

செய்திப்பிரிவு

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தங்கியிருப்பதாலும், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருப்பதாலும் கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

600 போலீசார்

வடக்கு மண்டல ஐ.ஜி. தாமரைக்கண்ணன் தலை மையில் காஞ்சிபுரம், திரு வள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களின் எஸ்.பி.க் கள் மேற்பார்வையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, 50-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய கமாண்டோ வீரர்களும் இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. முத்தரசி, தனியார் விடுதிக்குள் சென்று பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்தார். விடுதியின் பின்பகுதியில் உள்ள கடற் பகுதியில் அத்துமீறி யாரும் உள்ளே நுழையாத அளவுக்கு கடலோரப் பாதுகாப்பு படை போலீஸ் உதவியுடன் கண் காணிப்புப் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT