தமிழகம்

ஏடிஎம்களில் பணம் எடுக்க உச்சவரம்பு அதிகரிப்பு: பொதுமக்கள், வணிகர்கள் வரவேற்பு

செய்திப்பிரிவு

ஏடிஎம்களில் ரூ.4,500 வரை பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு நீட்டிக் கப்பட்டிருப்பதை பொதுமக்கள், வணிகர்கள் வரவேற்றுள்ளனர்.

ரிசர்வ் வங்கி அறிவித்தபடி ஏடிஎம் மையங்களில் நேற்று காலை பொதுமக்கள் ரூ.4 ஆயிரத்து 500 எடுத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, அவர்கள் தெரிவித்த கருத்து:

எஸ்.ராஜலஷ்மி, ஆசிரியை:

பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான பிறகு, வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். பணம் இல்லாததால் பெரும்பாலான ஏடிஎம்கள் மூடப் பட்டன. இதனால் வங்கிகளில் பணம் எடுக்க பலமணி நேரம் காத்திருந்தோம். அதன்பிறகு ஏடிஎம்களில் ரூ.2 ஆயிரம் நோட்டு கள் கிடைக்கத் தொடங்கியதும் சற்று நிம்மதி அடைந்தோம். தற் போது ரூ.4 ஆயிரத்து 500 வழங் கப்படும் என அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆர்.தேவி, தனியார் நிறுவன ஊழியர்:

ஏடிஎம்களில் ரூ.2,500 கிடைத்து வந்த நிலையில் தற் போது ரூ.4,500 ஆக உயர்த்தப்பட் டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், பெரும்பாலான வங்கி ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டு கள் இல்லாததால் ரூ.4 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க முடிந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால் சில ஏடிஎம்கள் மட்டுமே திறந்திருந்தன. வரும் நாட்களில் அதிகளவு ஏடிஎம்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.வாசுகி, இல்லத்தரசி:

ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.4 ஆயிரத்து 500 ஆக அதிகரித்திருப்பது என்ற செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்துள் ளோம். இவ்வளவு நாள் ஏடிஎம்களில் அதிகட்சமாக ரூ.2 ஆயிரத்து 500 வரை மட்டுமே எடுக்க முடிந்ததால் பணத்தேவைக்காக அடிக்கடி ஏடிஎம்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது அதிகளவு பணம் எடுக்க முடியும் என்பதால் இனி ஏடிஎம்களுக்குச் செல்லும் தேவை குறையும்.

கே.ரமேஷ்குமார், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்:

ஏடிஎம்களில் ஜனவரி 1-ம் தேதி முதல் ரூ.4 ஆயிரத்து 500 பெற்றுக் கொள்ள முடியும் என அறிவித்திருந்தாலும், பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லாததால் நேற்றும் மக்கள் பணத்தை எடுக்க முடியவில்லை. குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் இன்னும் நிலைமை சீராகவில்லை. தனியார் வங்கி ஏடிஎம்களில் மட்டும்தான் பணம் கிடைக்கிறது. எங்கள் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம்கள் முன்பு நேற்று காலையிலேயை 100 பேர் வரை காத்திருந்து பணத்தை எடுத்துச் சென்றனர்.

எ.த.இளங்கோ, ஒருங்கிணைப் பாளர், தேவை இயக்கம்:

பண மதிப்பு நீக்கத்தால் கடந்த 50 நாட்களாக கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எங்கள் குடும்ப உறுப்பினரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். மருத்துவ மனைகளில் சிகிச்சைக் கட்ட ணத்தைப் பணமாக செலுத்தவே நிர்பந்திக்கின்றனர். வங்கி முன்பு காலை 6 மணிக்கே சென்று காத்திருந்தால் தான், பிற்பகல் 1 மணிக்கு, அதுவும் ரூ.10 ஆயிரம் வரை தான் கிடைக்கிறது. தற்போது வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லாத நிலையில், பணம் எடுப்பதற்கான அளவை உயர்த்தியிருப்பதால் எந்த பயனும் இல்லை.

          
SCROLL FOR NEXT