சென்னை ஆட்சியராக வெ.அன்புச் செல்வன் நேற்று பொறுப் பேற்றுக்கொண்டார்.
கடந்த மார்ச் 6-ம் தேதி தமிழகத்தில் உள்ள 17 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டிருந்தது. அதில் சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஸ்வரி, வணிக வரி இணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக (வருவாய் மற்றும் நிதி) பணியாற்றிய வெ.அன்புச்செல்வன், சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அன்புச் செல்வன், சென்னை மாவட்ட ஆட்சியராக நேற்று பொறுப்பேற்றுக்கொண் டார்.