தமிழகம்

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை 6 மாதத்துக்குள் விசாரணை முடிவடையும்: விசாரணை ஆணையத்தின் தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பாக 6 மாதங்களுக்குள் விசாரணை முடிவடைய வாய்ப்புள்ளது என தனி நபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் எஸ்.ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி சென்னை மெரினா கடற்கரை, கோவை, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 14 முதல் 23-ம் தேதி வரை போராட்டம் நடை பெற்றது. போராட்டத்தின் முடிவில் வன்முறை வெடித்தது.

இது தொடர்பாக விசாரிக்க தனி நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் தலைவராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ் வரன் நியமிக்கப்பட்டார்.

விசாரணை ஆணையம் சென்னை டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் (கிரீன்வேஸ் சாலை) உள்ள பொதிகை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. ஜல்லிக் கட்டு வன்முறையால் பாதிக்கப் பட்டவர்கள் ஆணையத்திடம் பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்யும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வாக்குமூலத்தை தாக்கல் செய்ய கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், வாக்குமூலத்தை அளிக்கும் தேதி நீட்டிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சரவ ணன் தலைமையில் வழக்கறிஞர் கள் சிலர் ஆணையத்தின் தலைவர் எஸ்.ராஜேஸ்வரனிடம் நேற்று கோரிக்கை மனுவை அளித்தனர்.

இது தொடர்பாக எஸ்.ராஜேஸ் வரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜல்லிக்கட்டுப் போராட்ட வன்முறை தொடர்பாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 1,951 பேர் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர். இதில் சுமார் 800 பேர் பொதுமக்கள், மீதமுள்ளவர்கள் போலீஸார்.

வாக்குமூலங்கள் பெறப் பட்டதையடுத்து கடந்த ஜூன் 7-ம் தேதி முதல் விசாரணையை தொடங்கியுள்ளேன். வாக்குமூலம் தாக்கல் செய்தவர்களில் ஒரு நாளைக்கு 5 பேர் வீதம் விசார ணைக்கு அழைப்பு விடுக்கிறோம். ஆனால், இதுவரை 7 பேர் மட்டுமே விசாரணைக்கு ஆஜராகி யுள்ளனர். செல்போனில் அழைத்தும் பலர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்த விசாரணை 6 மாதங் களுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசார ணைக்குப் பிறகு அரசிடம் அறிக்கை அளிக்கப்படும்.

வெளியூர்களில் இருந்து விசாரணைக்கு ஆஜராகும் நபர்க ளுக்கு பயணப்படி வழங்கப்படும். அதேபோல, மாற்றுத்திறனாளிகள், முதியோர் விசாரணைக்கு வர முடியவில்லை எனில், அவர்களின் பெயர், முகவரியை தெரிவித்தால் அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று வழக்கறிஞர்கள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும்.

SCROLL FOR NEXT