தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தப்படும் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 54 மீனவர் கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் கடந்த சனிக்கிழமை முதல் இன்று காலை வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம் இருந்து வந்த மீனவர்களை, டி.ஆர்.பாலு இன்று (செவ்வாய் கிழமை) காலை நேரில் சந்தித்தார். அப்போது அவர்களிடம், தமிழக மீனவர்களை விடுதலை செய்வது குறித்து பிரதமரை வரும் 27-ஆம் தேதி மீனவப் பிரதிநிதிகளுடன் நேரில் சந்தித்து வலியுறுத்தப் போவதாக வாக்குறுதி அளித்தார்.