தெற்கு ரயில்வேயில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு நாளை (24-ம் தேதி) சென்னை வருகிறார்.
எண்ணூர் திருவொற்றியூர் இடையே 4வது புதிய ரயில்பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதேபோல், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 2 லிப்ட்கள், 17 ரயில் நிலையங்களில் எல்இடி விளக்குகள், சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 கிலோ வாட் சோலார் மின்உற்பத்தி நிலையம், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய் வறை, தாம்பரத்தில் உணவகம், அரக்கோணம் ரயில் நிலையத்தில் வை-ஃபை வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நாளை (24-ம் தேதி) தொடங்கிவைக்கிறார். இதற்கு முன்னதாக நுங்கம்பாக்கத்தில் நடக்கும் ஜிஎஸ்டி மாநாட்டில் அவர் பங்கேற்று பேசவுள்ளார்.