தமிழகம்

நாச்சிக்குப்பம் கிராமத்துக்கு வருவாரா நடிகர் ரஜினி?

எஸ்.கே.ரமேஷ்

நடிகர் ரஜினி தனது சொந்த கிராமமான நாச்சிக்குப்பத்துக்கு வருவாரா என கிராம மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சென்னையில் தனது ரசிகர் களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித் தார். அப்போது ரசிகர்களிடம் அவர் பேசுகையில், ‘என்னுடைய மூதாதை யர், பெற்றோர் கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்கள் என்பதை சொல்லி யிருக்கிறேன். ஏற்கெனவே ஒரு நிகழ்ச்சியில் இதுதொடர்பாக பேசியிருக்கிறேன்” என்றார்.

இந்நிலையில், நாச்சிக்குப்பம் கிராமத்தில் உள்ள சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ரஜினி, ஒருமுறையாவது சொந்த கிராமத் துக்கு வர வேண்டும் என்கிற கோரிக் கையை முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக நாச்சிக்குப்பத் தைச் சேர்ந்த ராமாராவ் கூறும் போது, சிறுவயதிலேயே ரஜினி தனது குடும்பத்துடன் பெங்களூரு வுக்குச் சென்றுவிட்டார். பின்னர், அங்கிருந்து சென்னைக்கு சென்ற வர், கடந்த 40 ஆண்டுகளில் ஒருமுறைகூட நாச்சிக்குப்பத்துக்கு வரவில்லை. ஏற்கெனவே அவர் 2 முறை வருவதாக தெரிவித்து இங்கே விழா ஏற்பாடுகள் செய் யப்பட்டன. வெளியூரில் படப்பிடிப் பில் இருந்ததாகக் கூறி, நிகழ்ச்சி ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டன.

மக்கள் ஆதங்கம்

அவரது பெற்றோருக்கு நினைவ கம் அமைக்க உள்ள இடத்தில் குடிநீர் தொட்டி ஒன்று கட்டப்பட் டது. அதன் திறப்பு விழாவுக்கு வரு வார் என நள்ளிரவு 12 மணி வரை காத்திருந்தும் அவர் வரவில்லை. அவரது சொந்த கிராமத்துக்கு எதுவும் உதவிகள் செய்யவில்லை என்கிற ஆதங்கம் பலரிடம் உள் ளது. இருந்தாலும் நம்ம ஊருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒருவர் பெரிய நடிகராக இருப் பதே பெருமைதான். அவர் ஒரு முறையாவது நாச்சிக்குப்பம் கிரா மத்துக்கு வர வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை” என்றார்.

நினைவகம் அமைக்க திட்டம்

நாச்சிக்குப்பம் கிராமத்தில் ரஜினி பெற்றோர் ரானோஜிராவ் - ராம்பாய் நினைவகம் அமைக்க 2009-ல் 3 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வேலி அமைக்கப்பட்டது. பெயர் பலகையும் வைத்துள்ளனர். அதன்பின்னர் எந்த பணிகளும் நடக்கவில்லை. இங்கு வேலை செய்து வரும் ராஜாராவ் கூறும் போது ரஜினி தனது பெற்றோருக்கு நினைவகம் அமைத்து, ஆதரவற்ற வர்களுக்கான இல்லம், திருமண மண்டபம், நூலகம் அமைக்க திட்டமிட்டுள்ளார். அவரது அண்ணன் சத்யநாராயணராவ் கெய்க்வாட், இங்கு அடிக்கடி வந்து செல்வார். இதுவரை ரஜினியை நேரில் பார்க்கவில்லை, என்றார்.

அப்பகுதி சிறுவர்கள் கூறும்போது, ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும், எங்கள் கிராமத்துக்கு ஒருமுறையாவது வர வேண்டும் என்றனர்.

தனது மூதாதையர்கள் வாழ்ந்த நாச்சிக்குப்பம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை ரஜினி செய்து கொடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கிராம மக்களிடம் அதிகமாக உள்ளது.

SCROLL FOR NEXT